உணவே மருந்து : மருந்தே உணவு

Create a website

July 25, 2009

சிறந்த வகை மூலிகை : தீரும் நோய்களும் - 2

  1. சிரியா நங்கை : விஷங்கள், மதுமேகம், உடல் பலவீனம்.
  2. .சிவகரந்தை : வாதம், பித்தம், காசம், விந்துநட்டம்.
  3. .சிறுபீளை : நீரடைப்பு, கல்லடைப்பு, முத்தோஷம்.
  4. .சீந்தில் : மதுமேகம், மலேரியா, பித்தம், தாது பலவீனம்.
  5. .திருநீற்று பச்சை : தோல் நோய்கள், வெட்டைசூடு, சளி, வாந்தி.
  6. .துத்தி : மூலம், அல்சர், கிட்னி வலிகள், நீர்சுருக்கு.
  7. துளசி : திரிதோஷம், சளி, ஆஸ்துமா, படர்தாமரை.
  8. தும்பை : சொறி, சிரங்கு, விஷங்கள், பீனிசம், வாதகப தோஷம்.
  9. தூதுவளை : சளி, இருமல், ஆஸ்துமா,ஈசினோபோலியா, பீனிசம், வாதகடுப்பு.
  10. நஞ்சறுப்பான் : கபம், கக்குவான், இருமல், விஷகடிகள்.
  11. நாயுருவி : மூலம், கபம், தேமல், மேகநோய்கள்.
  12. நில வேம்பு : கரம், நீர்கோவை, பித்த மயக்கம்.
  13. நில ஆவாரை : மலச்சிக்கல், மூலம், வயிறு உப்புசம், சிரங்கு.
  14. நொச்சி : சகல வாதங்கள், பீனிசம், இரைப்பு, இருமல்.
  15. பொடுதலை : இடுப்பு பிடிப்பு, ரத்தமூலம், மதுமேகம், தோல் நோய்கள்.
  16. பொன்னாங்கன்னி : கண் நோய்கள், மூலம், வாதம், உடல் உஷ்ணம்.
  17. புதினா : ருசியின்மை, வாந்தி, பசிமந்தம், அதிமலகழிவு.

சிறந்த வகை மூலிகை : தீரும் நோய்களும் - 1

  1. 1அருகம்புல் பொடி : அல்சர் , ஆஸ்த்மா , சர்க்கரை நோய் , விஷங்கள்
  2. அத்தி இலை பொடி : மூலம் , வயிற்று கடுப்பு , மலச்சிக்கல் , நீரிழிவு
  3. அகத்தி : உடல் உஷ்ணம் , பித்த மயக்கம் ,அல்சர்
  4. அரசு : நமைச்சல் , தாது நஷ்டம் , பெண் மலடு .
  5. அம்மான் பச்சரிசி : உடல் எரிச்சல் , வெள்ளை வெட்டை , உடல் காங்கை
  6. ஆவுரி : கீல்வாதம் , சளி , சகல விஷங்கள்.
  7. ஆடாதோடை : இருமல் , சளி ,ஆஸ்த்மா , பீநிஷம் , இருமலில் இரத்த கசிவு.
  8. ஆடு தீண்டபாளை : வயிற்று பூச்சி , சொறி, சிரங்கு , விஷகடிகள்.
  9. ஆல் : வயிற்று கடுப்பு , வெள்ளை விழுதல் , மேகநீர் .
  10. ஆவாரை இலை : சகல மூத்திர ரோகம் , அதிதாகம் , மதுமேகம்.
  11. ஓரிதழ் தாமரை : வெள்ளை , வெட்டை , நீர்சுருக்கு , தாது பலவீனம்.
  12. கரிசலாங்கண்ணி : மஞ்சள் காமாலை , இரத்த சோகை , ஈரல் கோளாறுகள் , வாதம்.
  13. கண்டங்கத்திரி : சளி , இருமல் , ஆஸ்துமா , ஈசினோபோலியா , பீனிசம்.
  14. கல்யாண முருங்கை : மூத்திர கோளாறுகள் , வாய் மற்றும் உள்வேக்காடுகள் .
  15. கருந்துளசி : இரைப்பு , இருமல் , நீர்கோவை , தாது பலவீனம் .
  16. கற்பூரவல்லி : சளி , இருமல் , காசம் , வாதகடுப்பு .
  17. கறிவேப்பிலை : பித்தம் , பசி மந்தம் , தலைமுடி நிறம் மங்கல
  18. காசினி : ஈரல்களின் சகல தோஷங்கள் , உடல் வீக்கம்.
  19. கீழாநெல்லி : மஞ்சள் காமாலை , அல்சர் , வயிற்று கோளாறுகள்.
  20. கொட்டைக்கரந்தை : வெள்ளை , கிரந்தி , தலை, மூளை மற்றும் இதய நோய்கள்.

July 24, 2009

இஞ்சி காயகல்பம் :

செய்முறை:
நன்கு சுத்தபடுத்திய மேல்தோல் நீக்கிய இஞ்சி 300 கிராம் எடுத்து அதை சிறியதுண்டுகளாக நறுக்கி, அதில் சுத்தமான மலைத்தேன் விட்டு,
இரண்டையும் ஒரு வாயகன்ற பத்திரத்தில் விட்டு அதில் மூழ்கும் வரை தேன்நன்கு விடவும்.
பின்பு அதை சூரிய ஒளியில் வைத்து எடுக்கவும். இவ்வாறு 30 நாட்கள் வைத்துஎடுத்து பாதுக்காக்கவும்.

3 முதல் 5 வில்லைகள் தினமும் காலை மட்டும் சாப்பிடவும்.
இத்துடன் அரிசி 250 gm மற்றும் இளநீர் மட்டும் அருந்திவரலாம்.
இவ்வாறு 3 மாதங்கள் தொடர்ந்தாலே நரை, திரை, மூப்பு மற்றும் பிணி சாக்காடு இன்றி வாழலாம் .
 

blogger templates | Make Money Online